Home முக்கியச் செய்திகள் பேரிடரால் பாதித்த இலங்கையை கட்டியெழுப்ப தேவைப்படும் பில்லியன் தொகை

பேரிடரால் பாதித்த இலங்கையை கட்டியெழுப்ப தேவைப்படும் பில்லியன் தொகை

0

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் சேதத்தை ஈடுசெய்யவும் அரசாங்கம் 1000 பில்லியன் ரூபாய் செலவிட எதிர்பார்க்கிறது என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு (2026) 600 மில்லியன் ரூபாய் செலவிடப்படும் என்றும், மீதமுள்ள தொகையை அதன் பிறகு செலவிட அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

வெளிநாட்டிலிருந்து கிடைக்காத பண உதவி

பேரிடர் ஏற்பட்ட முதல் 20 நாட்களில் இந்த நோக்கத்திற்காக அரசாங்கம் 50 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளதாகவும், இதுவரை மக்களுக்கு நிவாரணம் வழங்க வெளிநாட்டு உதவித் தொகை எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட பொருள் உதவி மட்டுமே இதுவரை மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது என்று ஆனந்த விஜேபால மேலும் குறிப்பிட்டார்.

NO COMMENTS

Exit mobile version