Home இலங்கை சமூகம் மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: வங்கி கணக்குகளுக்கு விடுவிக்கப்பட்ட பணம்

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: வங்கி கணக்குகளுக்கு விடுவிக்கப்பட்ட பணம்

0

2024 அஸ்வசும நலன்புரி திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய வகைகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு சிறப்பு கொடுப்பனவுகளை செலுத்துவதற்காக மொத்தம் 622,495 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நலன்புரி நன்மைகள் சபையினால் 11.6 பில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது.

திட்டத்தின் முதல் கட்டமாக, 2023 ஜூலை முதல் 31.03.2024 வரை பாதிக்கப்படக்கூடிய பிரிவின் தகுதியான பயனாளிகளுக்கு தலா 5000 ரூபாயும், இடைநிலை பிரிவின் கீழ் தகுதியானவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

விசேட கொடுப்பனவு

இந்த நிலையில், தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, அஸ்வசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு விசேட கொடுப்பனவுகளை செலுத்தும் காலத்தை இந்த வருடம் டிசம்பர் மாதம் வரை நீடிக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க நலன்புரி நன்மைகள் சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன் கீழ், ஜூன் 2024 மாதத்திற்கான இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு சிறப்பு கொடுப்பனவு வழங்கவும், ஜூலை 2024 முதல் டிசம்பர் 2024 வரை மட்டுமே அந்த இரண்டு பிரிவினருக்கும் மாதந்தோறும் 5000 ரூபாய் செலுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மிகவும் வறிய மற்றும் ஏழ்மையான பிரிவினருக்கு தற்போதுள்ள பணம் செலுத்தும் முறை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என நலன்புரி நன்மைகள் சபையின் தலைவரும் ஆணையாளருமான ஜெயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version