Home சினிமா 11 ஆண்டுகள் கடந்த என்றென்றும் புன்னகை படத்தின் மொத்த வசூல்.. இத்தனை கோடியா

11 ஆண்டுகள் கடந்த என்றென்றும் புன்னகை படத்தின் மொத்த வசூல்.. இத்தனை கோடியா

0

என்றென்றும் புன்னகை

சினிமாவில் சில திரைப்படங்கள் வெளியாகி பல வருடங்கள் இருப்பினும் மக்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்து வலம் வரும். அந்த வகையில், பல ஆண்டுகள் கடந்தும் இன்றும் மக்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்த ஒரு காமெடி கலந்த திரைப்படம் என்றென்றும் புன்னகை.

இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் ஜீவா, வினய், சந்தானம், திரிஷா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து 2013 – ம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படம் தான் என்றென்றும் புன்னகை.

இப்படத்தில் உள்ள சந்தானத்தின் காமெடி வசனங்கள் நிறைந்த காட்சிகள் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது.

சோபிதாவிடம் அப்படி பேச சொல்வேன், அதுதான் வசதி..நாக சைதன்யா போட்டுடைத்த ரகசியம்

மூன்று நண்பர்களின் வாழ்க்கை, அவர்களது தொழில் மற்றும் காதல் ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மொத்த வசூல்

இந்த படம் வெளியாகி நேற்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் மொத்தமாக ரூ. 25 கோடிக்கு மேல் வசூல் செய்து மாஸ் ஹிட் அடித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version