Home முக்கியச் செய்திகள் கடத்தி காணாமல் போன 11 இளைஞர்கள்: வசந்த கரன்னாகொட வழக்கின் உயர் நீதிமன்றின் அறிவிப்பு

கடத்தி காணாமல் போன 11 இளைஞர்கள்: வசந்த கரன்னாகொட வழக்கின் உயர் நீதிமன்றின் அறிவிப்பு

0

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை வழக்கில் இருந்து நீக்குவதற்கான சட்டமா அதிபரின் முடிவை ரத்து செய்யக் கோரி காணாமல் போன இளைஞர்களின் பெற்றோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் இன்று (15) அனுமதி அளித்தது.

உண்மைகளை நீண்ட நேரம் பரிசீலித்த பிறகு, மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது, பின்னர் இந்த மேல்முறையீட்டு மனுவை ஜனவரி (30) அன்று விசாரிப்பதற்கான திகதியை நிர்ணயித்தது. 

வெள்ளை வானில் கடத்தப்பட்ட 11 இளைஞர்கள்

2008-2009 ஆம் ஆண்டுகளில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வானில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் வசந்த கரன்னாகொட மற்றும் 13 பேருக்கு எதிராக முன்னாள் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

 இந்த நிலையில் 11 இளைஞர்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதில்லை என சட்டமா அதிபர் fடந்த 13.10.2021 அன்று மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்திருந்தார்.

NO COMMENTS

Exit mobile version