Home முக்கியச் செய்திகள் செவ்வந்தியின் பாணியில் மட்டக்களப்பில் கைது செய்யப்பட போலி சட்டத்தரணி : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

செவ்வந்தியின் பாணியில் மட்டக்களப்பில் கைது செய்யப்பட போலி சட்டத்தரணி : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்டு கைது
செய்யப்பட்ட போலி சட்டத்தரணியை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று திங்கட்கிழமை (08)
உத்தரவிட்டார். 

ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடை போல அணிந்து உள்நுழைந்து வழக்காடி தருவதாக
பொதுமக்கள் பலரிடம் பல இலட்சம் ரூபாவை மோசடி செய்ததுடன் சில சட்டத்தரணிகளையும்
ஏமாற்றிய போலி சட்டத்தரணி ஒருவரை கடந்த நவம்பர் 8ம் திகதி ஒந்தாச்சிமடம்
பகுதியில் வாடகைக்கு குடியிருந்த வீடு ஒன்றில் வைத்து கைது காவல்துறையினர் செய்தனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முற்படுத்தியதைத் தொடர்ந்து
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இன்று
சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது குறித்த வழக்கை
விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் இவரை எதிர்வரும் 15 ம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

NO COMMENTS

Exit mobile version