“மலையகத்தின் தந்தை” என போற்றப்படுகின்ற அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் (Savumiamoorthy Thondaman) 111 ஆவது ஜனன தினம் இன்று (30) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு (Colombo) பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவச்
சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதிநிதிகள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.
இந்நிகழ்வின் பின்னர் இ.தொ.காவின் தலைமையகமான சௌமியபவனின் சிறப்பு பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றுள்ளது.
ஜனன தின நிகழ்வு
அத்துடன், கொட்டகலையில் உள்ள சி.எல்.எப் வளாகம் உட்பட மலையக பகுதிகளிலும் ஜனன தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman), இ.தொ.காவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான்(Senthil Thondaman), நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் (Marudapandi Rameswaran), தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் (Vadivel Suresh), இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர்கள், உப தலைவர்கள், முன்னாள் பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள் உப்பட இ.தொ.கா
முக்கியஸ்தர்கள் என பலர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
சுதந்திர இலங்கையில் உருவான முதலாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினராக அங்கம் வகித்தவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், இலங்கை, இந்திய காங்கிரஸ் உருவாக்கத்துக்கு முக்கிய பங்களிப்பு வழங்கிய அதன் தலைவராகவும்
செயற்பட்டுள்ளமை குறிப்பிடதத்க்கது.