Home இலங்கை 12 வயது பேத்திக்கு தாத்தாவால் 2 ஆண்டுகள் தொடர்ந்த கொடூரம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

12 வயது பேத்திக்கு தாத்தாவால் 2 ஆண்டுகள் தொடர்ந்த கொடூரம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

0
image

கம்பளை பகுதியில் 12 வயதுடைய தனது பேத்தியை கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 54 வயதுடைய நபரை எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கம்பளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமிக்கு ஏற்பட்ட சிறுநீரகத் தொற்று காரணமாக கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில், அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருப்பது தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து, வைத்தியசாலையிலிருந்து கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகளை ஆரம்பித்த கம்பளை பொலிஸார், 54 வயதுடைய சந்தேகநபரை கைது செய்து கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதவான் சரசி ஸ்ரீ பரணமன், சந்தேகநபரை ஜூலை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின்படி, சந்தேகநபர் ஐந்து பிள்ளைகளின் தந்தை ஆவார். பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது மகன்களில் ஒருவரின் மகளாகும். சிறுமியின் தாயார் கடந்த நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறுமிக்கு பத்து வயதாக இருந்தபோது முதன்முறையாக இந்த துஷ்பிரயோகம் இடம்பெற்றதாகவும், அதன் பின்னரும் தொடர்ச்சியாக அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/grandfather-brutalized-12-year-old-granddaughter-for-2-years-court-issues-shocking-orders-1784013057

NO COMMENTS

Exit mobile version