Home முக்கியச் செய்திகள் மட்டக்களப்பில் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த 12 வயது சிறுவன்!

மட்டக்களப்பில் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த 12 வயது சிறுவன்!

0

மட்டக்களப்பு – வவுணதீவு காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 12 வயது சிறுவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று (08) மாலை குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக வவுணதீவு காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவன் சம்பவதினமான நேற்று மாலை 5.00 மணியளவில் தந்தாமலை கோவிலுக்கு போகப் போவதாக பெற்றோரிடம் கோரிய நிலையில் அதற்கு பெற்றோர் நாளை சனிக்கிழமை தீர்த்த உற்சவத்துக்கு போகலாம் என தெரிவித்திருந்தனர்

காவல்துறையினர் விசாரணை 

இந்தநிலையில் மனமுடைந்த சிறுவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளான்.

சாளம்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதுடைய பிரகலாதன் நிஷாந் என்பவரே
இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் சடலத்தை மீட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக
ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version