Home இலங்கை அரசியல் 13 மணித்தியால மின்வெட்டு : பதவியேற்ற பின்னர் நிலைமையை மாற்றியமைத்த ரணில்

13 மணித்தியால மின்வெட்டு : பதவியேற்ற பின்னர் நிலைமையை மாற்றியமைத்த ரணில்

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) 2022ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட போது நாட்டில் 13 மணித்தியால மின்வெட்டு காணப்பட்டது.  ஆனால் ஆறு மாதங்களுக்குள் அந்த நிலைமையை அவர் மாற்றியமைத்தார் என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழு பிரதானியுமான சாகல ரத்நாயக்க(Sagala Ratnayaka) தெரிவித்துள்ளார். 

அநுராதபுரம் ஸ்ரீ மகா போதிய வளாகத்தில் LTL வர்த்தக குழுமத்தினால் அமைக்கப்பட்ட 150 கிலோவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய சூரிய சக்தி கட்டமைப்பை கையளிக்கும் நிகழ்வில் இன்று (13) கலந்துகொண்டு உரையாற்றிய போதே சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

நல்ல நிலைமையை ஏற்படுத்திய ஜனாதிபதி 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு LTL வர்த்தக நிறுவனத்தினால் ருன்வெலி மகா சாயவில் மின்சார ஒளிக் கட்டமைப்பொன்று நிறுவப்பட்டது. அப்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

LTL நிறுவனம் மின்சார சக்தி துறையில் பாரிய வேறுபாடுகளை ஏற்படுத்திய நிறுவனம்.

இலங்கை தனது தொழிலை ஆரம்பித்து சர்வதேச அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் அர்பணிப்பே அதற்கு காரணமாகும்.

2002 ஆம் ஆண்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆட்சியை பொறுப்பேற்றுக்கொண்ட வேளையில் 18 மணித்தியால மின்வெட்டு காணப்பட்டது.

நிலைமையை மாற்றியமைத்த ரணில் 

அடுத்து, 2022 ஆம் ஆண்டில் அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற வேளையில் 13 மணித்தியால மின் வெட்டு காணப்பட்டது. ஆனால் ஆறு மதங்களுக்கு அந்த நிலைமையை மாற்றியமைத்து நாட்டில் நல்ல நிலைமையை ஏற்படுத்த ஜனாதிபதியால் முடிந்தது.

மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை விரிவுபடுத்த இந்தியாவிடமிருந்து 10  மில்லியன் டொலர்கள் நன்கொடையாக கிடைத்திருக்கிறது.

அதன்படி 100 மில்லியன் டொலர்கள் பெறுமதியானதாக மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை பலப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version