Home இலங்கை சமூகம் கேகாலையில் 13 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கேகாலையில் 13 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

0

கேகாலை (Kegalle) – அரநாயக்கவில் உள்ள பாடசாலை ஒன்றில் 13 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக திடீர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது, திப்பிட்டியவில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இடம்பெற்றுள்ளது. 

திடீர் சுகவீனம் 

இதன்போது, தரம் ஆறில் கல்வி கற்கும் 13 மாணவர்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதுடன் திடீர் சுகவீனமடைந்துள்ளனர். 

இதனை தொடர்ந்து, அவர்கள் அரநாயக்க வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அதேவேளை, உணவு ஒவ்வாமைக்கான காரணம் உட்பட்ட மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Source: https://tamilwin.com/article/13-students-admitted-in-kegalle-hospital-allergies-1730467320

NO COMMENTS

Exit mobile version