Home இலங்கை சமூகம் மன்னாரில் மழை வெள்ளத்தின் சீற்றம் : கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்கள்

மன்னாரில் மழை வெள்ளத்தின் சீற்றம் : கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்கள்

0

மன்னாரில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்
செல்வம் அடைக்கலநாதன் நேரடியாக சென்று
பார்வையிட்டதுடன் அவசர உதவியாக உலர் உணவு பொதி யையும் வழங்கி வைத்துள்ளார்.

குறித்த நடவடிக்கையானது நேற்றைய தினம் (23) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழை
காரணமாக 2045 குடும்பங்களை சேர்ந்த 7778 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார்
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தற்காலிக முகாம்

இந்த நிலையில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல்வேறு கிராமங்கள்
வெள்ள நீரில் மூழ்கியுள்ளதோடு,மக்கள் பல்வேறு இடர்களுக்கு முகம்
கொடுத்துள்ளதோடு, தற்காலிக முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொதிகளை வழங்கி வைத்ததுடன்பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவிகளை முன்னெடுக்க உறிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

அத்தோடு. பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மன்னார் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மன்னார்
பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ
நிலையத்தின் உதவி பணிப்பாளர் க.திலீபன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக விஜயம்
செய்து நிலமையை ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும், நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு சமைத்த உணவை வழங்க அதிகாரிகள்
நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version