Home இலங்கை சமூகம் காவல்துறை ஊடகப் பிரிவுக்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

காவல்துறை ஊடகப் பிரிவுக்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

0

காவல்துறை ஊடகப் பிரிவுக்கு தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, 0112 887 973 என்ற புதிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மிக வேகமாக செயற்படும் வசதிகளுடன் காவல்துறை ஊடகப் பிரிவை தொடர்புகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர வேலைத்திட்டம்

குறைந்த தரத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவசர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளே, உப காவல்துறை இன்ஸ்பெக்டர் பதவிக்கு கீழுள்ள அதிகாரிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகி வருவதாக அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

இப்பிரச்சினைகள் தொடர்பில் சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடி நிவர்த்திப்பதற்கான முறைமையைத் தயாரிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Source: https://ibctamil.com/article/police-media-division-new-telephone-number-1732435289

NO COMMENTS

Exit mobile version