2023 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி காரணமாக 15.1% பேர் வேலை இழந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நாட்டில் 60.5% குடும்பங்களின் மாத வருமானம் குறித்த காலப்பகுதியில் குறைந்ததாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
2023 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் தாக்கம் குறித்துமக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் வெளியிட்ட வீட்டுவசதி கணக்கெடுப்பின் இறுதி அறிக்கையில் இவை தெரியவந்துள்ளன.
மாதாந்திர செலவினம்
அறிக்கையின்படி, குடும்ப அலகுகளின் சராசரி மாதாந்திர செலவினம் 91.1% அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் மாதாந்திர செலவினம் 5.3% மாறாமல் உள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் 22% குடும்பங்கள் கடன் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன என்றும், நாட்டின் மக்கள் தொகையில் 7% பேர் முறையான சுகாதார சிகிச்சையை நாடவில்லை என்றும் தொடர்புடைய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
