கொட்டாஞ்சேனையில் அண்மையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி அம்ஷிகாவிற்கு நீதியை கோரி இன்று நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னர் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம்(19) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்போதே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளும், பொது மக்களும் குறித்த போராட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக நீதியான விசாரணை கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
