Home இலங்கை சமூகம் தென்னிலங்கையில் கோர விபத்து : பாடசாலை மாணவர்கள் பலர் காயம்

தென்னிலங்கையில் கோர விபத்து : பாடசாலை மாணவர்கள் பலர் காயம்

0

ஹொரணை (Horana) – இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பேருந்தும் சிறிய லொறியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹொரணை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும் இங்கிரிய நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிய லொறியும் மோதிய நிலையிலேயே மேற்படி விபத்து நிகழ்ந்துள்ளது.

குறித்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இங்கிரிய காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை

அத்துடன் காயமடைந்தவர்களில் லொறி சாரதி மற்றும் உதவியாளரும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

காயமடைந்தவர்கள் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஆபத்தான நிலையில் இருந்த லொறி உதவியாளர் உட்பட பாடசாலை மாணவர்கள் சிலர் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version