Home இலங்கை சமூகம் யாழில் பாடசாலைக்குச் சென்ற 15 வயது மாணவி மாயம்: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

யாழில் பாடசாலைக்குச் சென்ற 15 வயது மாணவி மாயம்: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

0

யாழில் பாடசாலைக்குச் சென்ற 15 வயது மாணவி ஒருவர் வீடு திரும்பவில்லை என்று
சாவகச்சேரிப் (Chavakachcheri) பொலிஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோரால் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவி நேற்று(27.04.2024) காலை சாவகச்சேரியில் அமைந்துள்ள பாடசாலைக்குச் செல்வதாக
வீட்டில் கூறிச் சென்ற நிலையில் இரவாகியும் வீடு திரும்பாமையால் பெற்றோரால்
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

]

மேலதிக விசாரணைகள்

சாவகச்சேரி, கச்சாய் வீதிப் பகுதியைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு
காணாமல்போயுள்ளார்.

முறைப்பாட்டை அடிப்படையாக வைத்து சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/15-year-old-student-missing-in-jaffna-1714303053

NO COMMENTS

Exit mobile version