Home இலங்கை அரசியல் இலங்கை தமிழர் தேசமா… மனித புதைகுழியா!

இலங்கை தமிழர் தேசமா… மனித புதைகுழியா!

0

தமிழர் தாயகப்பகுதிகளில் அண்மை நாட்களாக மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், போர் காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உடல் இதிலிருந்து மீட்கப்பட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் (M. K. Shivajilingam) தெரிவித்துள்ளார்.  

எனினும், இந்த குழிகளில் இருந்து இதுவரை எந்தவொரு படையினரதும் உடலங்கள் கண்டெடுக்கப்படவில்லை என ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய உத்தியோகப்பூர்வ செவ்வியின் போது அவர் கூறியுள்ளார். 

இலங்கையில் தமீழீழ தேசிய விடுதலை போராட்டம் ஆரம்பித்ததிலிருந்து, குறிப்பாக 1980 ஆம் ஆண்டிலிருந்து பலர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாகவும் 1983 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை தொடர்ந்து, மோதல்கள் வெடித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   

பகிரங்க விவாதத்தை தவிர்க்கும் சஜித்: குற்றம் சாட்டும் அனுர!

இனப்படுகொலை 

இதையடுத்து, பலர் காணாமல் ஆக்கப்பட்டு கொல்லப்பட்டதோடு, கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் கடலில் அல்லது வீதிகளில் வீசப்பட்டதாகவும் சிலரது உடலங்கள் எரிக்கப்பட்டதாகவும் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

எனினும், கொல்லப்பட்ட சிலரது உடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் தற்போது கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகளில் உள்ளவை அவர்களது உடலாக இருக்கலாமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித புதைகுழி தொடர்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தவற்றை கீழுள்ள காணொளியில் காணலாம்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மீண்டும் முன்னிலையாகியுள்ள மைத்திரி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

https://www.youtube.com/embed/CGzy_WxWoQE

NO COMMENTS

Exit mobile version