Home இலங்கை சமூகம் யாழில் அனுஷ்டிக்கப்பட்ட கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வுகள்

யாழில் அனுஷ்டிக்கப்பட்ட கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வுகள்

0

கறுப்பு ஜூலைப் படுகொலையின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்றுள்ளது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (Tamil National People’s Front) ஏற்பாட்டில் யாழ். முற்றவெளி மைதானம் முன்பாக இன்று (23) மாலை நடைபெற்றுள்ளது.

இதன்போது, நினைவேந்தல் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு ஏனையவர்களும் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அரசியல் கைதி

அத்துடன், ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெலிக்கடை சிறைசாலையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளும் நாடு முழுவதும் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களும் நினைவு கூறப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன் (Deepan Thilesan), மகளீர் அணித் தலைவி வாசுகி சுதாகரன் (Vasuki Sudhakaran) உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version