Home இலங்கை சமூகம் இரத்து செய்யப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன வர்த்தமானி

இரத்து செய்யப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன வர்த்தமானி

0

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து, வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வெளியிடப்பட்ட குறித்த வர்த்தமானியை தொடர்ந்து, அதனை உறுதிப்படுத்தி மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில்,பெருந்தோட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடியதன் அடிப்படையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர்நீதிமன்றம் தடையுத்தரவைப் பிறப்பித்திருந்தது.

உத்தியோகபூர்வ அறிவிப்பு 

குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் இரண்டும் அரச அச்சகத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கையில் உள்ள சிங்கள ஊடகமொன்று அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகேவை தொடர்பு கொண்ட போது, அவர், இணையதளத்திலிருந்து வர்த்தமானி இரத்து செய்யப்பட்டதால் அந்த அறிவித்தல் இரத்து செய்யப்பட்டதாகவே கருதப்படும்”எனத் தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று (24) வெளியாகலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன விடயத்தில் அரசாங்க தரப்பினருக்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் இடையே புதிய இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், இது தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று அண்மையில் இடம்பெற்றிந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version