Home இலங்கை குற்றம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்த முற்பட்ட பாரியளவிலான போதைப்பொருள்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்த முற்பட்ட பாரியளவிலான போதைப்பொருள்

0

இந்தியாவின் (India) மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு 150 கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்த முயன்ற இருவரை தமிழ்நாடு – வேளாங்கண்ணி பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று (14.06.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

நாகை – வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு பல கோடி ரூபா மதிப்பிலான
போதைப்பொருள் கடத்த இருப்பதாக நாகை க்யூ பிரிவு பொலிஸாருக்கு இரகசியத் தகவல்
கிடைத்துள்ளது.

காரில் இரகசிய பகுதி

இதனையடுத்து, வேளாங்கண்ணி ஆரிய நாட்டு தெருவில் உள்ள தனியார்
விடுதி ஒன்றில் பொலிஸார் தீவிர
சோதனை நடத்தியுள்ளனர்.

இதன்போது, விடுதியின் ஓர் அறையில் தங்கியிருந்த 2 பேரை சந்தேகத்தின்
பேரில் கைது செய்து விசாரணை நடத்தியதில் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் கியாபரி
பகுதியைச் சேர்ந்த குறித்த இருவரும் இராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு போதைப்பொருளைக் கடத்தத் திட்டமிட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

இதற்காக, காரில் இரகசிய பகுதி ஒன்றை அமைத்து
75 கிலோ ஹசீஸ் எனப்படும் போதைப்பொருளை மறைத்து வைத்து மேற்கு வங்கத்தில்
இருந்து வந்துள்ளனர்.

 சர்வதேச சந்தை மதிப்பு

இந்நிலையில், 1,500 கிலோ மீற்றர் தூரத்துக்கு மேலான பயணத்தின் பின்னர் வேளாங்கண்ணியிலுள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்துள்ளனர். 

இதன்போது, நேற்று (14) இராமேஸ்வரம் சென்று படகு மூலம்
போதைப்பொருளை இலங்கைக்கு அனுப்புவதற்கு திட்டமிட்டிருந்த நிலையிலேயே இருவரையும் பொலிஸார் விடுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

75 கிலோ போதைப்பொருள்
பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த அளவிலான போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு 150 ரூபா கோடி ஆகும்.

இந்நிலையில், குறித்த நபர்களுக்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மற்றுமொரு நபரே கையடக்கத்தொலைபேசி மூலம் உதவியுள்ளார்.

இந்நிலையில், அவரை கைது செய்ய தஞ்சை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version