Home இலங்கை அரசியல் 2024 நாடாளுமன்றத் தேர்தல்: 1500 ஐ கடந்த முறைப்பாடுகள்

2024 நாடாளுமன்றத் தேர்தல்: 1500 ஐ கடந்த முறைப்பாடுகள்

0

நாடளுமன்ற தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1535 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 376 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1159 முறைப்பாடுகளும் 35 ஏனைய முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 127 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தல் குறித்த வன்முறை சம்பவமொன்றும் பதிவாகியுள்ளது.

தேர்தல் விதிமீறல்கள்

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை அதிகமாக கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இதுவரை 15 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதனடிப்படையில் இதுவரையான முறைப்பாடுகளில் 1248 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 287 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

நாடளுமன்ற தேர்தல் இம்மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version