Home இலங்கை சமூகம் இலங்கையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெருமளவு மக்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெருமளவு மக்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்

0

இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் 15 ஆயிரம் பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.

மலைப்பாங்கான பகுதியில் மண்திட்டுங்கள் சரிந்து விழும் அபாயமுள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது குறித்து பல பகுதி வாழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும், பெருபாலானோர் அங்கிருந்து இன்னும் வெளியேறவில்லை என நிறுவத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்

15 ஆயிரம் பேர் வசிக்கும் கிராமங்களில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும், ஐயாயிரம் பேர் வரையிலேயே அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.

மேலும் பல பகுதிகளில் ஆபத்து குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆபத்தில் இருக்கும் மற்றும் ஆய்வு செய்யப்படாத மலைப்பகுதிகளில் மக்கள் வசித்து வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.


உயிராபத்தான நிலையில்

அண்மையில் ஏற்பட்ட தித்வா புயல் காரணமாக மலையகம் படுமோசமான அனர்த்த நிலைக்கு முகங்கொடுத்துள்ளது.

பல கிராமங்கள் அழிந்து போயுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழ்ந்துள்ளர்.

பலர் காணாமல் போயுள்ள நிலையில் தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் பெருமளவமான மக்கள் உயிராபத்தான நிலையில் மலைப்பகுதிகளில் தங்கியுள்ளமை குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version