Home இலங்கை சமூகம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் அளவு : வெளியான தகவல்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் அளவு : வெளியான தகவல்

0

அரிசி இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியின் அளவு 16,000 மெற்றிக் தொன்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம், சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், இன்று (18) பிற்பகல் 3:30 மணி வரையான காலப்பகுதியில் குறித்த அளவு அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரிசி இறக்குமதி

இதில் 6,000 மெற்றிக் தொன் பச்சை அரிசி என்பதோடு மற்றும் மீதமுள்ள 10,000 மெற்றிக் தொன் நாட்டரிசியென குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,  கடந்த டிசம்பர் மாதம் நான்காம் திகதி முதல் அரிசி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்கியதன் பின்னர் இதுவரை 16,000 மெற்றிக் தொன் அரிசி கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version