Home இலங்கை சமூகம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிதாபமாக உயிரிழந்த 16 வயது மாணவி

யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிதாபமாக உயிரிழந்த 16 வயது மாணவி

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மாணவி ஒருவர்
உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி
பயிலும் சந்திரானந்தன் வர்ணயா (வயது 16) என்ற மாணவியே நேற்று(08) உயிரிழந்துள்ளார்.

தொடர்ச்சியாக மயக்க நிலை

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

குறித்த மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கடந்த மாதம் 5ஆம் திகதி
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பித்துள்ளனர்.

வைத்தியசாலையில் சேர்ப்பித்து சில தினங்களில் குறித்த மாணவி மயக்க நிலையை
அடைந்துள்ளார்.

தொடர்ச்சியாக மயக்க நிலையில் இருந்து வந்த நிலையில் நேற்று காலை பரிதாபமாக
உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டார்.

கிருமித் தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று
பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version