Home இலங்கை அரசியல் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு நீதியை நிலைநாட்டுங்கள்: சஜித் கோரிக்கை

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு நீதியை நிலைநாட்டுங்கள்: சஜித் கோரிக்கை

0

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 16
வருடங்கள் ஆகின்ற நிலையில், உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்கள்
கடந்துள்ள போதிலும், இந்தக் கொலைக்கான மூல காரணத்தையும், கொலைகாரர்களையும்
இதுவரை எந்த அரசாலும் கண்டுபிடிக்க முடியாதுபோயுள்ளன.

கொடூரத் தாக்குதல்

இந்த விவகாரத்தை அவரது
மகள் அஹிம்சா விக்கிரமதுங்க ஐக்கிய நாடுகள் சபையிடம் எடுத்துச் சென்றுள்ளார்.

அத்துடன், தனியார்  ஊடகம் ஒன்றின் மீதும், கொடூரத் தாக்குதல் இடம்பெற்றும் 16
வருடங்கள் கடந்துள்ளன.

லசந்த விக்கிரமதுங்க மற்றும் இராஜமகேந்திரன் ஆகியோர்
நீதி மற்றும் நியாயத்திற்காக முன் நின்றார்கள்.” என்றார்.

NO COMMENTS

Exit mobile version