Home இலங்கை சமூகம் யாழ். மாவட்ட அரச நிறுவனத்தில் 162 வெற்றிடங்கள்..!

யாழ். மாவட்ட அரச நிறுவனத்தில் 162 வெற்றிடங்கள்..!

0

யாழ் .மாவட்ட செயலகம் மற்றும் 15 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய அரச
நிறுவனத்தில் 162 ஆளணி வெற்றிடங்கள் காணப்படுவதாக மாவட்ட பதில் அரசாங்க
அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் (31.01.2025) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளணியினர் தேவைப்பாடு 

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்ட செயலகம் உட்பட அதன் கீழ்
இயங்கும் 15 பிரதேச செயலகங்களில் அங்கீகரிக்கப்பட்ட ஆளணியினருக்கு குறைவாக
பின்வரும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டி உள்ளது.

நிர்வாக கிராம உத்தியோகத்தர் 06, கிராம உத்தியோத்தர்கள் 65, முகாமைத்துவ
உதவியாளர்கள் 27, அலுவலக உதவியாளர்கள் 45, சாரதிகள் 12 மற்றும் மாவட்ட
பதிவாளர் தின களத்தில் 08 பேர் உள்ளடங்களாக 162 ஆளணியினர் தேவைப்பாடு
இருப்பதாக கூறினார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர விரைவில் முப்பதாயிரம் பேரை அரச
சேவையில் இணைத்துக் கொள்வதற்கான திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version