Home இலங்கை 17 ஆண்டு கால விளக்கமறியலின் பின்னர் தமிழ் அரசியல் கைதி ஒருவருக்குப் பிணை

17 ஆண்டு கால விளக்கமறியலின் பின்னர் தமிழ் அரசியல் கைதி ஒருவருக்குப் பிணை

0
image

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்த உளவுத் தகவல்களை வழங்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

கடந்த 17 ஆண்டுகளாக எவ்வித இறுதித் தீர்ப்புமின்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த செல்லையா பியூபாகரன் என்பவருக்கே நேற்று இவ்வாறு பிணை அனுமதிக்கப்பட்டது.

எனினும், நீதிமன்றம் விதித்த கடுமையான பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதற்குப் போதிய பிணையாளர்களோ அல்லது வசதிகளோ இல்லாத காரணத்தால், பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் அவர் மீண்டும் சிறைச்சாலையிலேயே அடைக்கப்பட்டுள்ளார்.

நீண்டகாலமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் மனித உரிமைகள் மற்றும் நீதித்துறைத் தாமதங்கள் குறித்து இந்தச் சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே மீண்டும் பலத்த விவாதத்தை உருவாக்கியுள்ளது.

Source: https://samugammedia.com/tamil-political-prisoner-granted-bail-after-17-years-of-detention-1785548625

NO COMMENTS

Exit mobile version