Home இலங்கை சமூகம் தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பள உயர்வு : எட்டப்பட்ட இறுதி தீர்மானம்

தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பள உயர்வு : எட்டப்பட்ட இறுதி தீர்மானம்

0

தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில் 1700 ரூபாய் சம்பளம் வழங்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

தொழில் திணைக்களத்தில் ஆணையாளர் தலைமையில் இன்று(12) இடம் பெற்ற பேச்சுவார்த்தையிலே இறுதி தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அடிப்படை சம்பளம்

இதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும், உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தையில்  அரசாங்கம் சார்பிலும், தொழில் சங்கங்கள் சார்பிலும், முதலாளிமார் சம்மேளனம் சார்பிலும் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பள விடயம் உயர் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில், நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட தவறுகளை திருத்தி அமைத்து 1700 ரூபாய் சம்பளம் உயர்வை பெற்றுத்தர முழு ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe), முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) ஆகியோருக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளத்தை முன்மொழிந்தது போல அதனை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் முழுப்பொறுப்பும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்,1700 ரூபாய் சம்பளம் கிடைக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் செந்தில் தொண்டமான் நன்றிகளை தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version