Home முக்கியச் செய்திகள் 1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்த விமல் வீரவன்ச: வெளியிட்டுள்ள காரணம்

1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்த விமல் வீரவன்ச: வெளியிட்டுள்ள காரணம்

0

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தனது நற்பெயருக்கு ஏற்பட்ட சேதம் ஏற்பட்டுள்ளதாக 1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி இரண்டு குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது காரணமின்றி குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் இன்று (12) பிரதிவாதிகளாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி எரங்க ரம்புக்வெல்ல, சிரேஷ்ட அதிகாரம் பெற்ற அதிகாரி சுஜீவ ரத்நாயக்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கைது நடவடிக்கை

அதன் போது, 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி மூன்று வெளிநாடுகளில் நடைபெறவிருந்த மாநாடுகளில் பங்கேற்பதற்காக டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து, அவர் வெளிநாடு செல்வதற்காக தூதரக கடவுச்சீட்டை வழங்கியதாகவும், அங்குள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் அதனை சரிபார்த்து அது செயலற்ற விமான அனுமதிப்பத்திரம் என அறிவித்ததாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் எவ்வித நியாயமான காரணமும் இன்றி கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், தனது நற்பெயருக்குப் பெரும் சேதம் விளைவிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, தனது நற்பெயருக்கு ஏற்பட்ட சேதத்திற்காக பிரதிவாதிகளிடமிருந்து 1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version