தமக்கான நாள் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 1,700 ரூபாவை வழங்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்களை வலியுறுத்தி தலவாக்கலையில் (Talawakelle) போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டமானது, தலவாக்கலை நானுஓயா தோட்டத் தொழிலாளர்களால் நேற்று (14) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பள உயர்வை வழங்க மறுக்கும் நிறுவனங்கள் தோட்டங்களை விட்டு வெளியேற வேண்டும் என தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடின உழைப்பு
தாம் கடின உழைப்பை வழங்குகின்ற போதிலும் அதற்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை எனவும், இந்த நிலைமை தொடரக் கூடாது எனவும் கோசங்கள் எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன், போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என தோட்ட நிர்வாகம் அச்சுறுத்துகின்றமைக்கு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.