Home இலங்கை சமூகம் சாவகச்சேரி வைத்தியசாலை முன் பதற்றம்: சற்றுமுன் ஒருவர் கைது – மக்கள் செல்லத்தடை

சாவகச்சேரி வைத்தியசாலை முன் பதற்றம்: சற்றுமுன் ஒருவர் கைது – மக்கள் செல்லத்தடை

0

வைத்தியர்
அர்ச்சுனா விடுப்பில் கொழும்பு (colombo) சென்றிருந்த நிலையில்
விடுப்பு காலம் முடிவடைந்து இன்றையதினம் மீண்டும் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலைக்கு வருகை செய்துள்ளார்.

இதனால் சாவகச்சேரி வைத்தியசாலை (Chavakachcheri Base Hospital) வளாகத்திற்கு முன்பாக இன்று (15.7.2024) காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வைத்தியர் அர்ச்சுனா கடந்த திங்கட்கிழமை விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளார்.

மக்கள் விசனம் 

இந்நிலையில், அவரை வரவேற்கும் முகமாகவும் அவருக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும்
மக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடினர். 

குறித்த பகுதிக்குள் காரணம் ஏதுமின்றி எவர் ஒருவரையும் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை என்றும், தங்களது கட்டுப்பாட்டில் சாவகச்சேரி வைத்தியசாலையை காவல்துறையினர் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது காவல்துறையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரின் இந்த செயற்பாடு குறித்து மக்கள்
விசனம் தெரிவித்துள்ளனர்.

https://www.youtube.com/embed/X1EP8W34E2M?start=19

NO COMMENTS

Exit mobile version