Home உலகம் வெளிநாடொன்றில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் பலி

வெளிநாடொன்றில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் பலி

0

பிரேசிலில் (Brazil) ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 179 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரேசிலின் தெற்கு மாகாணமான ரியோ கிராண்டி டு சுல் நகரில் கடந்த மே மாதம் முதல் பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

இந்த நிலையில், குறித்த  நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

தேடும் பணி

இதன் காரணமாக 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 33 பேர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/179-dead-in-brazil-floods-1719917784

NO COMMENTS

Exit mobile version