Home இலங்கை அரசியல் நல்லையம்பதி அலங்கார கந்தன் திருவிழாவின் 17ஆம் நாள்

நல்லையம்பதி அலங்கார கந்தன் திருவிழாவின் 17ஆம் நாள்

0

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்புணம் நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான
வருடாந்த மகோற்சவத்தின் பதினேழாவது நாள் திருவிழா நேற்று இடம்பெற்றது.

பதினேழாவது நாள் திருவிழாவின் மாலை நேரத் திருவிழாவான அருணகிரிநாதர்
திருவிழா இதன்போது இடம்பெற்றது.

குறித்த மஹோற்சவ கிரியைகளை ஆலயபிரதம சிவஸ்ரீ வைகுந்தன் குருக்கள் தலைமையிலான
சிவாச்சாரியர்கள் நடாத்திவைத்தனர்.

மஹோற்சவம்

கடந்த 09.08.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவமானது 25 நாட்கள்
இடம்பெறும்.

நேற்றைய திருவிழாவில் பல இடங்களிலும் இருந்து வருகைதந்த பக்தர்கள் பூஜை
வழிபாடுகளில் கலந்துகொண்டு முருகப் பெருமானின் இஷ்ட சித்திகளை பெற்றுச்
சென்றனர்.

Source: https://tamilwin.com/article/17th-day-of-nallur-kandan-festival-1724652634

NO COMMENTS

Exit mobile version