Home இலங்கை அரசியல் அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரசார நடவடிக்கைகள்!

அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரசார நடவடிக்கைகள்!

0

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுக் கட்டமைப்பின் கீழ் போட்டியிடும் அரியநேத்திரனுக்கு (P. Ariyanethiran) ஆதரவு தெரிவித்து துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்து பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த பிரசார நடவடிக்கைகள் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டம் களுவாஞ்சிகுடி (Kaluwanchikudy) நகரில் இன்று (17.09.2024) முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள், கடைத்தொகுதிகள், பேருந்து நிலையம், பொதுச்சந்தைத் தொகுதி உள்ளிட்ட பல இடங்களிலும் இத்துண்டுபிரசுர பிரசாரப்பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அரியநேத்திரனுக்கு ஆதரவு

மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, முன்னாள் கிழக்கு மாகண சபையின்
பிரதித் தவிசாளர் இ.பிரசன்னா, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நா.நகுலேஸ், மற்றும் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட பலரும்இதன்போது கலந்து கொண்டு துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு விநியோகித்து பிரசார
நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை, தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை (P. Ariyanethiran ) ஆதரித்து சிவஞானம் சிறீதரனின் (S. Shritharan) ஏற்பாட்டில் நேற்று (16)‘தமிழ்த் தேசிய இனத்தின் எழுச்சியே தமிழ்த் தேசத்தின் மீட்சி’ என்ற பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/election-campaign-for-tamil-candidate-in-east-1726561436

NO COMMENTS

Exit mobile version