Home இலங்கை சமூகம் இலங்கை கடற்பரப்பில் 18 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் 18 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

0

இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 18 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கடற்றொழிலாளர்கள் இன்று (23) அதிகாலை யாழ்ப்பாணம் (Jaffna) நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை
கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட பயன்படுத்தப்பட்ட மூன்று
படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஊர்காவற்றுறை நீதிமன்றம்

கைதான கடற்றொழிலாளர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச்
செல்லப்பட்டுள்ளதுன், அவர்களை கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரிடம்
ஒப்படைத்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
எடுக்கப்படவுள்ளது.

Source: https://tamilwin.com/article/18-indian-fishermen-arrested-in-sri-lankan-waters-1719115068

NO COMMENTS

Exit mobile version