Home சினிமா 18 ஆண்டுகளை கடந்த சிவாஜி படம்.. உலகளவில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா

18 ஆண்டுகளை கடந்த சிவாஜி படம்.. உலகளவில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா

0

சிவாஜி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவான முதல் திரைப்படம் சிவாஜி. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். நடிகை ஸ்ரேயா கதாநாயகியாக நடிக்க, சுமன் வில்லனாக நடித்திருந்தார்.

மேலும் விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி, ரகுவரன், சாலமன் பாப்பையா, பட்டிமன்றம் ராஜா, உமா பத்மநாபன் என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். நடிகை நயன்தாரா ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

இளைஞர்களின் கனவுக்கன்னி நடிகை ஸ்ரீலீலாவின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

மொத்த வசூல்

2007ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இன்று வரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இன்றுடன் இப்படம் வெளிவந்து 18 ஆண்டுகள் நிறைவு ஆகியுள்ளது. இதனை #18yearsofsivaji என சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில், சிவாஜி படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 2007ம் ஆண்டு வெளிவந்த இப்படம் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இதன்மூலம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் என்கிற சாதனையை படைத்து, இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தது. 

NO COMMENTS

Exit mobile version