Home இலங்கை சமூகம் செஞ்சோலை படுகொலையின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல்

செஞ்சோலை படுகொலையின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல்

0

Courtesy: Devshanth

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டம் வள்ளிபுனம் செஞ்சோலை வாளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானத்தாக்குதலில் கொல்லப்பட்ட 54 மாணவச் செல்வங்களின் 18ஆம்
ஆண்டு நினைவுநாள் நினைவு கூறப்பட்டுள்ளது.

செஞ்சோலை வளாகத்தின் நினைவு வளைவு அமைந்துள்ள முன்வீதியில் தாய்த்தமிழ்
பேரவையினரில் ஏற்பாட்டில் நேற்று (14.08.20224) குறித்த நிகழ்வுகள்
ஆரம்பமாகியது.

இந்நிகழ்வில், பொது ஈகை சுடரினை செஞ்சோலை வளாகத்தில் படுகொலை
செய்யப்பட்ட 2 பிள்ளைகளின் தந்தையார் ஏற்றிவைத்தார்.

பொதுமக்கள் 

அதனைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட பெற்றோர் பிள்ளைகளின்
திருவுருவப்படத்துக்கு சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தமிழ்த்தேசிய
செயற்ப்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version