Home விளையாட்டு ஐ.சி.சியின் ஒருநாள் போட்டி வீரர்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்த துடுப்பாட்ட வீரர்

ஐ.சி.சியின் ஒருநாள் போட்டி வீரர்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்த துடுப்பாட்ட வீரர்

0

ஒருநாள் போட்டி வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி (ICC) வெளியிட்டுள்ளது.

அதில் ஒருநாள் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில்
பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம்(Babar Azam) முதலிடம் பிடித்துள்ளார்.

இந்திய வீரர் ரோகித் சர்மா(Rohit Sharma) 2-வது இடத்தில் உள்ளார்.

துடுப்பாட்ட வீரர்கள்

இந்திய வீரர் சுப்மன் கில்(Shunman Gill) 3வது இடத்திலும், விராட் கோலி 4வது இடத்திலும் உள்ளனர்.

4வது இடத்தில் அயர்லாந்து வீரர் ஹெரி டெக்கடரும் உள்ளார்.

6வது இடத்தில் நியூசிலாந்து வீரர் டேரல் மிட்சேலும், 7வது இடத்தில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர்(Dawid Warner) உள்ளார்.

8வது இடத்தில் இலங்கை(Srilanka) வீரர் பெதும் நிஸ்ஸங்கவும்(Pathum Nissanka) 9வது இடத்தில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலானும்,
10வது இடத்தில் தென்னாபிரிக்க வீரர் ரேசி வென்டர்டசனும் உள்ளனர்.

பந்துவீச்சாளர்கள்

ஒருநாள் போட்டிக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் முதல் இடத்தில் உள்ளார்.

இந்திய வீரர் குல்தீப் யாதவ் 4-வது இடம் பிடித்துள்ளதுடன் பும்ரா 8வது இடத்தில் உள்ளார்.

சகலத்துறைவீரர்

ஒருநாள் போட்டிக்கான சகலத்துறைவீரருக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தான் அணி வீரர் முகமது நபி முதல் இடத்தில் உள்ளார்.

முதல் 10 இடங்களில் இந்திய வீரர் ஒருவர் கூட இடம்பெறவில்லை. இந்திய வீரர் ஜடேஜா 16வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version