Home இலங்கை அரசியல் இரண்டு தடவை எரிபொருள் கொடுப்பனவு பெறும் ஆளும் தரப்பு அமைச்சர்கள்

இரண்டு தடவை எரிபொருள் கொடுப்பனவு பெறும் ஆளும் தரப்பு அமைச்சர்கள்

0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 19 அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் தங்களது அமைச்சு அதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான எரிபொருள் கொடுப்பனவுகளை பெற்றுக் கொண்டுள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வட்டார தகவல்களின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

எரிபொருள் கொடுப்பனவு

எவ்வாறெனினும், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட 30 பேர் நாடாளுமன்றில் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை இடை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த கோரிக்கையின் அடிப்படையில் குறித்த 30 பேருக்கும் நாடாளுமன்றில் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பணவு கடந்த ஏப்ரல் மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய அமைச்சர்களும் கோரிக்கை விடுத்தால் இந்த கொடுப்பனவை இடைநிறுத்த முடியும் என நாடாளுமன்ற நிதி பிரிவு தெரிவித்துள்ளது.

இதே வேலை சபாநாயகர் பிரதி, சபாநாயகர், தெரிவுக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் மட்டும் கொடுப்பனவுகளுக்காக எட்டு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

ஊழல் மோசடி

ஏனைய மாதங்களிலும் இவ்வாறான ஒரு தொகை செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவர் வசிக்கும் மாவட்டத்தின் அடிப்படையில் எரிபொருள் கொடுப்பனவு பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

உதாரணமாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதாந்தம் 283.94 லீட்டர் எரிபொருள் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் திகா மட்டுல்ல போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 639.53 லீட்டர் எரிபொருள் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது. 

ஊழல் மோசடிகளை தவிர்ப்பதாகவும், வீண் விரயத்தை இல்லதொழிப்பதாகவும் கூறி ஆட்சி பீடம் ஏறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சிலர் இவ்வாறு இரண்டு எரிபொருள் கொடுப்பனவு பெற்றுக் கொள்வது குறித்து விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version