சந்தேகத்திற்கிடமான முறையில் வீடொன்றில் ஒன்று கூடிய 19 நபர்கள் மூதூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் நேற்று (02) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன்போது கூரிய வாள்கள், ஐஸ்
போதைப்பொருள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல்
சந்தேகத்திற்கிடமான முறையில் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் பிரதேசத்தில்
ஒரு குழுவினர் ஒன்று கூடுவதாக மூதூர் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பிரகாரம் மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைவாக
தோப்பூர் காவலன் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.எப்.எம்.றமீஸ் தலைமையிலான
பொலிஸ் குழுவினர் குறித்த வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது 19 பேர் கைது
செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 4 கூரிய வாள்கள், 2520 மில்லிகிராம், 2300
மில்லிகிராம் நிறையுடைய இரண்டு ஐஸ் போதைப்பொருள் பக்கெட்டுக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கைதானவர்கள்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஈச்சிலம்பற்று, தோப்பூர், மூதூர், பச்சநூர்
பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இவர்கள் மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் இவர்களை மூதூர் நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
