வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட விசேட யுக்திய சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது
19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் யுக்திய விசேட நடவடிக்கைக்கு
அமைய வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் வவுனியா சிரேஷ்ட
பொலி்ஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலின்படி தலைமை பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயக்கொடி தலைமையிலான பெண் பொலிசார்
உள்ளடங்களாக 106 பொலிசார் இவ் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
போதைப் பொருளுடன் கைது
பொலிசாருக்கு உதவியாக 21 இராணுவ வீரார்கள், மற்றும் விசேட அதிரடிப்படையை
சேர்ந்த 4 பேரும் இவ் விசேட நடவடிக்கையில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, வவுனியா தேக்கவத்தைப் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவர் 2005
மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்ததுடன், மேலும்
அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவர் 3580 மில்லிகிராம் ஐஸ்
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
தொடர்ந்து மகாறம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்ற சோதைனையின் போது அப்பகுதியை
சேர்ந்த இருவர் 100 கிராம் கஞ்சா கலந்த மாவாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், திறந்த பிடியானை இருந்த ஐந்து நபர்களுடன், பிடியானை
பிறப்பிக்கப்பட்டிருந்த இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்தும் ஆள் அடையாள ஆவணங்கள் உடைமையில் வைத்திருக்காத 4 பெண்கள் மற்றும் 4
ஆண்களையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செயப்பட்ட
அனைவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
[DOLME8L[