யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஒருநாள் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைதடி மத்தி, கைதடியைச் சேர்ந்த 42 வயதுடைய சிவபாலசிங்கம் காந்தரூபன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், “குறித்த நபர் நேற்று முன்தினம் (21) தனது தாயாரின் வீட்டில் இருந்தவேளை திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
நிமோனியா தொற்று
இந்தநிலையில் புத்தூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
பின்னர் வீட்டுக்கு வந்த அவர் கதிரையில் இருந்தவாறே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
நிமோனியா தொற்றினால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
