Home இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பு விடுத்த காத்தான்குடி மக்கள்!

வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பு விடுத்த காத்தான்குடி மக்கள்!

0

மட்டக்களப்பு(Batticaloa) – காத்தான்குடி நகர சபை பிரிவில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாக காத்தான்குடி அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்பட்டு வந்த காத்தான்குடி பொதுமக்கள் வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அழைப்பு விடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி நகர சபைக்கு உட்பட்ட வீதி மற்றும் கால்வாய் புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன.

குறித்த புனரமைப்பு பணிகளில் அந்த பகுதி மக்களின் நலனில் கவனம் செலுத்தாத நிலையில் காத்தான்குடி அரசியல் தலைமைகளிடம் நம்பிக்கை இழந்த அந்த பகுதி மக்கள் வரலாற்றில் முதல் தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவுக்கு அழைப்பு விடுத்து தங்களது பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.

மக்களின் பிரச்சினை

மோட்டார் சைக்கிளில் காத்தான்குடி பிரதேசத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பாதிக்கப்பட்ட மக்களிடம் வீடு வீடாக சென்று அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதோடு குறித்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

காத்தான்குடி நகர சபை பிரிவில் உலக வங்கி நிதியில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் அந்த பகுதி மக்களின் கருத்துக்களை உள்வாங்கி மக்கள் பாதிக்கப்படாத வகையில் வீதி மற்றும் கால்வாய் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

காத்தான்குடியில் கடந்த காலங்களில் எத்தனையோ அமைச்சர்கள் இருந்தும் தங்களது வீதியானது 30 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் உலக வங்கியின் நிதியுதவியில் புனரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், அதனை உரிய முறையில் வடிகான் அமைப்பை மேற்கொள்ளமல் பணிகளை மேற்கொள்ளமையால் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரவு  தலையீட்டினால் மக்களின் கோரிக்கை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து காத்தான்குடி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version