கனடாவில் (Canada) ஓடும் வாகனங்களிலிருந்து சுமார் 2.2 மில்லியன் டொலர் (dollar) பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பயணம் செய்து கொண்டிருந்த ட்ரக்டர் டெய்லர் ரக வாகனங்களுக்குள் பிரவேசித்து பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இவ்வாறு பாரியளவு பொருட்களை கொள்ளையிட்ட மூன்று சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள்
வாகனங்கள் சிகப்பு சமிக்ஞைகளில் நிறுத்தப்பட்ட போது, சந்தேக நபர்கள் வாகனத்திற்குள் புகுந்து பொருட்களை களவாடியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, கடந்த மே மாதம் முதல் இவ்வாறு பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், சில இடங்களில் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.