Home முக்கியச் செய்திகள் யாழில் அநுரவின் பெயரில் நடந்த மோசடி: நெல்லியடியில் சிக்கிய மதபோதகர்

யாழில் அநுரவின் பெயரில் நடந்த மோசடி: நெல்லியடியில் சிக்கிய மதபோதகர்

0

யாழ்ப்பாணம் (Jaffna) – நெல்லியடிப் பகுதியில் தேசிய மக்கள் சக்தி (NPP) மற்றும் அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) பெயரைப் பயன்படுத்தி நிதிசேகரிப்பில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என தன்னை அறிமுகப்படுத்திய மதபோதகர் ஒருவரும் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், “கடந்த ஒரு வாரகாலமாக தேசிய
மக்கள் சக்தியினையும் அநுரகுமார திசாநாயக்கவின் பெயரையும் பயன்படுத்தி தம்மை
மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என அறிமுகப்படுத்தி குறித்த இருவரும் நிதிசேகரிப்பில் ஈடுபட்டு
வந்துள்ளனர்.

காவல்துறையினரிடம் ஒப்படைப்பு 

நேற்று நெல்லியடி நகரில் நிதி சேகரிப்பில் ஈடுபட்ட போது நிதி வழங்க மறுத்தவர்களை அநுரவின் பெயரைக் கூறி ஒளிப்படத்தைக் காண்பித்து அச்சுறுத்தி நிதியை வலுக்கட்டாயமாக பெற முற்பட்ட போது வர்த்தகர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு கூடிய வர்த்தகர்கள் குறித்த நபர்களை மடக்கிப்பிடித்து
விசாரணை மேற்க்கொண்டு நெல்லியடி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் காவல் நிலையத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் குறித்த நபர்களை
கடுமையாக எச்சரித்து விட்டு விடுவித்துள்ளனர்.

மக்களை அச்சுறுத்தினார்

நிதிசேகரிப்பில் ஈடுபட்ட மதபோதகர் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என்று தன்னை
அறிமுகப்படுத்தியதுடன் சிறுவர்களைப் பராமரிப்பதற்காகவே இந்த நிதியை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். எனினும் அதற்கான
பற்றுச் சீட்டுக்கள் எவற்றையும் வழங்கவில்லை.

இதேவேளை நிதி கொடுக்க மறுத்தவர்களை எலிக்காய்ச்சல் வந்து இறப்பாய் என்றும், அநுரவை நான்
தான் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்தேன் எனவும் அநுர ஆட்களைப் பற்றித் தெரியும்
தானே என அச்சுறுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் குறித்த மதபோதகர் கடந்த காலங்களில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) பிரசார
மேடைகளில் ஆசியுரைகளை கூறியதுடன் அநுர அரசுக்கு ஆதரவு கோரி ஆசியுரைகளை
வழங்கி வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/xjITVbsViDw

NO COMMENTS

Exit mobile version