Home இலங்கை சமூகம் திருகோணமலையில் விபத்துக்குள்ளான எரிபொருள் கொள்கலன் வாகனம்! இருவர் படுகாயம்

திருகோணமலையில் விபத்துக்குள்ளான எரிபொருள் கொள்கலன் வாகனம்! இருவர் படுகாயம்

0

திருகோணமலை (Trincomalee) -கண்டி பிரதான வீதியின் 98 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தானது  இன்று (27) மாலை இடம் பெற்றுள்ளது .

இதன்போது, கொழும்பில் (Colombo) இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த எரிபொருள் கொல்கலன் வாகனமே இவ்வாறு வீட்டு மதிலை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றுள்ளது.

ஆரம்ப கட்ட விசாரணை

இந்த விபத்தானது நித்திரை கலக்கம் காரணமாக இடம் பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது.

இதில் மதுகம பகுதியை சேர்ந்த எரிபொருள் கொள்கலன் வாகனத்தை செலுத்திய சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவர் காயமடைந்துள்ளனர். 

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Source: https://ibctamil.com/article/2-injured-in-fuel-vehicle-accident-in-trinco-1719496301

NO COMMENTS

Exit mobile version