Home இலங்கை குற்றம் புதுக்குடியிருப்பில் பாடசாலையின் மின் விசிறிகளை கொள்ளையிட்ட நபர் உட்பட மூவர் கைது

புதுக்குடியிருப்பில் பாடசாலையின் மின் விசிறிகளை கொள்ளையிட்ட நபர் உட்பட மூவர் கைது

0

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, கைவேலி பாடசாலையில் மின்விசிறிகளை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய
மூவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று(10.09.2024) இடம்பெற்றுள்ளது.

கைது நடவடிக்கை

புதுக்குடியிருப்பு, கைவேலி கணேசா வித்தியாலயத்தில் கடந்த மாதம் 16 ஆம் திகதி 4
மின் விசிறிகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

அதனையடுத்து, பாடசாலை சமூகத்தினரால்
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து நேற்றையதினம்
(10.09.2024) கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய கைவேலி முதலாம் வட்டாரத்தை
சேர்ந்த 27 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பாடசாலை மின்விசிறிகளை களவாடிய நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்
குறித்த சந்தேகநபர் மின்விசிறிகளை களவாடி இருநபர்களுக்கு தலா 3000 ரூபாவிற்கு
விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, மின்விசிறிகளை வாங்கிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் இன்றையதினம்(11) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில்
முற்படுத்த இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொள்ளையிட்ட குறித்த சந்தேகநபர் பொருட்களை விற்று அதிலிருக்கும் பணத்தினை போதை
பொருளுக்கு பயன்படுத்தி வந்துள்ளமை குறிப்பிடதக்கது.

May you like this,

Source: https://tamilwin.com/article/2-persons-arrested-robbed-the-electric-fans-1726001858

NO COMMENTS

Exit mobile version