Home அமெரிக்கா படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க வீரர்கள்.. கடும் சீற்றத்தில் ட்ரம்ப் நிர்வாகம்

படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க வீரர்கள்.. கடும் சீற்றத்தில் ட்ரம்ப் நிர்வாகம்

0

சிரியாவில் ஒரு தனி இஸ்லாமிய அரசு துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்களும் ஒரு அமெரிக்க சிவில் மொழிபெயர்ப்பாளரும் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

குறித்த தாக்குதலில் மேலும் மூன்று படைவீரர்கள் காயமடைந்த நிலையில், துப்பாக்கிதாரியும் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கொல்லப்பட்டவர்களின் அடையாளங்கள் அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்குத் தெரிவிக்கப்படும் வரை 24 மணி நேரம் மறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரக்கமின்றி கொல்வோம்.. 

இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், “நீங்கள் அமெரிக்கர்களை குறிவைத்தால் – உலகில் எங்கும் அமெரிக்கா உங்களை வேட்டையாடும். 

உங்களைக் கண்டுபிடித்து, இரக்கமின்றி கொல்லும் என்பதை அறிந்து உங்கள் சுருக்கமான, பதட்டமான வாழ்க்கையின் எஞ்சிய பகுதியை நீங்கள் கழிப்பீர்கள்.” என கடுமையாக எச்சரித்துள்ளார். 

இது சர்வதேச களத்தில் ஒரு புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

NO COMMENTS

Exit mobile version