யாழ். (Jaffna) பருத்தித்துறை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீட்டுக்கு கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இந்த துயர சம்பவம் நேற்று (28.06.2025) சனிக்கிழமை மாலை கிணற்றடி வைரவர் கோவிலடி – குரும்பைகட்டி, புலோலியில் இடம்பெற்றுள்ளது.
பிறந்த நாளை கொண்டாடிய குழந்தை
இரண்டு தினங்களிற்கு முன்னர் தனது பிறந்த நாளை கொண்டாடிய அனுசயன் வயது இரண்டு என்ற ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
கிணற்றில் விழுந்த நிலையில் மீட்க்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு (Base Hospital, Point Pedro) கொண்டு சென்ற போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
குழந்தையின் சடலம் மரண விசாரணைக்காகவும் பிரேத பரிசோதனைக்காகவும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
