Home இலங்கை பொருளாதாரம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் செக் – இன்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் செக் – இன்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

0

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதை அடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறைந்தது 20 செக்-இன் கவுண்டர்களை உள்ளடக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் விமான நிலையத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் அறிக்கையின்படி, கூடுதல் செக்-இன் கவுண்டர்களுக்கான இடங்களை தீர்மானிக்க விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சுற்றுலா பயணிகளின் வருகை 

இக்கலந்துரையாடலின் போது, ​​சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சுற்றுலாப் பயணிகளின் வருகை வேகமாக அதிகரித்து வருவதால், விமான நிலைய வசதிகளை முடிந்தவரை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். 

அதேவேளை, எதிர்வரும் 2028ஆம் ஆண்டளவில் 12 மில்லியன் விமானப் பயணிகளை ஈர்க்க அரசாங்கம் எதிர்பார்க்கும் அதே நேரத்தில் மற்ற சர்வதேச விமான நிலையங்களில் உள்ள நிறுவனங்களையும் இலங்கைக்கு அழைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மேலும், மாகாணத்தின், முக்கிய வருவாய் ஆதாரமான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version